சமர்ப்பணம் தாயிற்கு!
பெத்தவ உதரினால் பிறப்பதற்கு முன்பே இவ்வுலகிற்கு பயந்து வார்த்தைகளினாளோ கத்தியினாளோ நம்பிக்கை எனும் கருவியினாளோ
வளர்த்தவள் எங்கே தனது வளர்ப்பிற்கு பங்கம் வந்துவிடுமோ என பதரிப்போய் கண்டிப்புடன் வளர்த்தால்
இப்படி பெற்றவளும் கைவிட வளர்த்தவளும் உதைக்க அப்பிள்ளை மூத்தோனிடம் முறையிடுவது இயற்கைதானே
அம்மூத்தோனும் நாளாக ஒர் தாயாகி ஊர் பெற்றெடுத்த மகனாகின்றான்(ள்) ஊருக்காக தன்னையும் தாயாக்கிக்கொள்கிறார் அவளும் அவனும்
பிறக்கின்றனர் அவனும் அவளும் ஓர் தாயாய் வழிகாட்டியாய் இவ்வுலகிற்கு
தாயல்லவா அவள் ஏனையோரை தன் மகனாக மகளாக பாவித்து செய்யும் சேவைகள் எத்துனை எத்துனை நான் எப்படி அதைச்சொல்வேன். அவளின் அவனின் பிள்ளைகள் பாடுவது கேட்பதன் மூலமாக “என்னத்தவம் செய்தனை யசோதா…” தெரியும்.
பெற்றால் தான் தாயா பிள்ளையா. யாதும் ஊரே யாவரும் கேளிர்
வளர்தாலும், மனமுருகச்செய்பவளு(னு)ம் தாயே ஊருக்கு
சமர்ப்பணம் தாயிற்கு!
தவம் செய்த தேவகி கண்ணணையும், அகழ்வாரைத் தாங்கும் பூமாதேவி பேதையான கோதையையும், சத்தியத்தில் உருவான குந்தி கர்னனையும், அழகிற்கும் அறத்திற்கும் தாயான சிவமோகினி ஐயனையும், தெலுங்கு தாய் தமிழ் நாட்டில் வாழும் தெழுங்கர்களையும், தமிழ் தாய் பிற நாட்டில் வாழும் தமிழர்களையும் பிழைத்துக்கொள் மகனே, மகளே என வழியனுப்பிய பொழுது ! மற்ற தாயிடம் விட்டுச் சென்றபொழுது.
உரக்கச்சொல்கிறேன் கேள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
தமிழ்த்தாயே இப்பேதைகளின் கண் திரப்பாயே
வடக்கனை ஏசாதே வந்தேரிகள் என. எவனோ பெற்ற பிள்ளை என. அவரும் ஓர் தாய், நீ கொடுக்கும் சொற்ப நாணயத்தில் அவனும் வாழ்ந்து வடக்கிளுள்ள தாயான குடும்பத்தையும் வாழவைக்கின்றார் அத்தாய் எனப்படுவோர்.
சில நாற்றான்டிற்கு முன்பாக எனை வடுகன் (வடக்கன்) என நீ கூப்பிட்டது போதும் அத்தாயையும் முத்திரையிடாதே, நீ ஈன்ற தாய்கள் மற்ற தாயிடம் கிழக்கன் என்று பேரை பெற்றிட வழிவகுத்துவிடாதே
பெருந்தாயான தமிழிடம் இப்போ தாயாக நினைப்பவனி(ளி)ன் கதறலும் கண்ணீருடன் முறையிடுதலும் குறளற்றவர்களுக்கும், குறளொடுக்கப் பெற்றவர்களுக்கும் ஆதரவாய். எனக்கு நம்பிக்கை உண்டு எனை வளர்த்த தமிழ்த்தாயின் மீது….
பாவம் வயிற்றுப்பசி போக்க எத்திசையிலும் இருந்து திகைக்கும் கரும்பை தேடி வருவது குற்றமா வடுகன் அல்லது வடக்கன் என அழைக்கப்பெற்ற எறும்பைச் சொன்னேன் உன் சிறு பிள்ளைகளிடம் படும் இன்ப அவஸ்த்தைகளை பெருந்தாயாக நீ தட்டிக்கேள் உன் மாற்றூரில் வசிக்கும் பிள்ளையை எவனேனும் ஏதனும் செய்தாலோ செய்யமுயன்றாலோ நின்று கேட்பேன் நான் ஐக்கிய தாயிடம் திருத்தம் செய்யும் வரை அல்லது என்னுயிர் இருக்கும்.. கவலை வேண்டாம் அது தமிழ் வாழும் வரை சாகாது பாதியில் ஓய்வதற்கு வளர்த்த கடன் அடைக்கும் வரை
பிழைக்க வந்தோம் ஞாயன்மாறே எங்கள் கடவுளாக கருதி உம்மையும் உம்மருமை ஜெகத்தாயையும். சிறு பிழை ஏதேனும் செய்தாயின் மன்னித்து கடவுளாகு மாமனிதா தமிழனே வா